வீடு புகுந்து நகை திருட்டு


வீடு புகுந்து நகை திருட்டு
x
தினத்தந்தி 11 Oct 2021 2:09 AM IST (Updated: 11 Oct 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பகுதியில் வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.

மதுரை,

மதுரை மேல அனுப்பானடி ஜே.ஜே. நகரைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 55). இவரும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து லட்சுமி கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story