கூடுதல் விலை கிடைப்பதால் கேரட் விவசாயிகள் மகிழ்ச்சி


கூடுதல் விலை கிடைப்பதால் கேரட் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 11 Oct 2021 7:41 PM IST (Updated: 11 Oct 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

கூடுதல் விலை கிடைப்பதால் கேரட் விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரி

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயமே பிரதானமாக உள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக கேரட் பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட் டைக்கோஸ் காலிப்பிளவர், நூல்கோல், மேரக்காய், பீன்ஸ், பட்டாணி உள்ளிட்ட மலைகாய்கறிகள் மற்றும் 


சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி போன்றவற்றையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக போதுமான மழை பெய்து வருகிறது.

 இதனால் கேரட் தோட்டங்கள் பசுமையாக காட்சி அளிக்கின்றன. மேலும் அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன.
கேரட்டுக்கு போதுமான கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. 

எனவே  கோத்தகிரி மற்றும் நெடுகுளா, காவிலோரை, பட்டக்கொரை, பில்லிகம்பை, கட்டபெட்டு, கதவுதொரை உள்ளிட்ட கிராம விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஏராளமான பரப்பளவில் கேரட் பயிரிட்டுள்ளனர்.

தற்போது கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கேரட் ஒரு கிலோ ரூ.28 முதல் ரூ.50 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story