கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது


கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 13 Oct 2021 12:12 PM GMT (Updated: 13 Oct 2021 12:12 PM GMT)

கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 வார்டுகளில் 17 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்று ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றி உள்ளது.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 வார்டுகளில் 17 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்று ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றி உள்ளது.

தி.மு.க. கைப்பற்றியது

கே.வி.குப்பம் ஒன்றியம் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை  சென்னங்குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதில் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 வார்டில் வெற்றிபெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெற்று ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றி உள்ளது. 

வெற்றிபெற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
17 வார்டுகளில்...

வார்டு- பாரதி (தி.மு.க.), வார்டு-2 இன்பசேகரன்  (தி.மு.க.), வார்டு-3 அமுலு  (தி.மு.க.), வார்டு-4 ராஜா (அ.தி.மு.க.), வார்டு-5 ஜெயாமுருகேசன் (தி.மு.க.), வார்டு- 6 வேலு (தி.மு.க.), வார்டு-7 மாலா (தி.மு.க.), வார்டு-8 வேங்கையன் (அ.தி.மு.க.), வார்டு-9 விஜயலட்சுமி (தி.மு.க.), வார்டு-10 சுந்தரி (தி.மு.க.), வார்டு-11 ரவி (தி.மு.க.), வார்டு- 12 சுரேஷ் (அ.தி.மு.க.), வார்டு-13 விஜயா (தி.மு.க.), வார்டு-14 மீனம்மாள் (தி.மு.க.), வார்டு-15 சீதாராமன் (தி.மு.க.), வார்டு-16 சரஸ்வதி (அ.தி.மு.க.), வார்டு-17  தாமோதரன் (தி.மு.க.), வார்டு-18 சரளா (தி.மு.க.), வார்டு- 19 சசிகுமார் (தி.மு.க.), வார்டு-20 ரவிச்சந்திரன் (தி.மு.க.), வார்டு-21 திவ்யா (தி.மு.க.).

அ.தி.மு.க.-4

மொத்தமுள்ள 21 வார்டுகளில் 17 வார்டுகளில் தி.மு.க.வும், 4 வார்டுகளில் அ.தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.

Next Story