மாவட்ட செய்திகள்

லாரியின் அடியில் சிக்கி தொழிலாளி சாவு + "||" + Accident

லாரியின் அடியில் சிக்கி தொழிலாளி சாவு

லாரியின் அடியில் சிக்கி தொழிலாளி சாவு
டி.கல்லுப்பட்டி அருகே லாரியின் அடியில் சிக்கி ெதாழிலாளி இறந்தார்.
பேரையூர்,

மதுரை மாவட்டம் வன்னிவேலம்பட்டியை சேர்ந்தவர் தங்கமுடி (வயது 32). இவர் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சோலைபட்டி விலக்கில் உள்ள மர அறுவை மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ஆயுதபூஜை அன்று அங்குள்ள லாரியை தங்கமுடி சுத்தம் செய்து கொண்டிருந்தார். லாரியின் லிவரை தூக்கிவிட்டு லாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென்று தூக்கி நிறுத்தப்பட்டிருந்த லாரி தங்க முடியின் மீது அமுக்கியது. இதில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இறந்த அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
2. வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. சேலத்தில் பயங்கர விபத்து கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி 6 வீடுகள் தரைமட்டம்
சேலத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு நிலைய அதிகாரி உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 6 வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
4. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் உயிரிழந்தார்.
5. விபத்தில் தொழிலாளி சாவு
சேத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலியானார்.