தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 Oct 2021 9:27 PM GMT (Updated: 15 Oct 2021 9:27 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

சாலையில் ஆபத்து
நாகர்கோவிலில் கோட்டார் ரெயில்வே ரோட்டில் இருந்து வாகையடி தெருவுக்கு செல்லும் சாலையில் குறுக்கே கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையின் மேல் உள்ள சிலாப் உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக ெசல்கிறவர்கள் கழிவு நீர் ஓடையில் தவறி விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன், வாகையடிதெரு.
வடிகால் ஓடை அமைக்கப்படுமா?
கன்னியாகுமரி பூங்குளத்துவிளை ரேஷன்கடை அருகில் உள்ள தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீரில் பாம்புகள் நடமாடுவதால் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும், கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, தெருவில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் ஓடை அமைக்க வேண்டும். 
-நபிசத், கன்னியாகுமரி.
சாலையில் தேங்கும் மழை நீர்
ஈசாந்திமங்கலம் ஊராட்சியில் ேகாவிந்தபுரம் பகுதியில் மழைக்காலங்களில் சாலையில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். மேலும், நடந்து செல்லும் பொதுமக்களும் சிரமப்படுகிறார்கள். எனவே, சாலையில் தண்ணீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துக்குமார், கோவிந்தபுரம்.
சேதமடைந்த சாலை
ஆளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருமலை நகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. எனவே, இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-மதிபூஷன், சுங்கான்கடை.
பஸ் நிறுத்தத்தில் கழிவுநீர்
குலசேகரம் அருகே உள்ள கல்லடிமாமூடு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை முன்பு மழைநீரும், சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. பஸ் ஏற காத்திருக்கும் பயணிகள் அந்த நீரை மிதித்துதான் பஸ்சில் ஏற வேண்டியது உள்ளது. இதனால், அவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, பஸ் நிறுத்தம் பகுதியில் சாக்கடை நீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-அஜித் குமார், மாத்தூர்.

Next Story