‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 Oct 2021 3:56 PM GMT (Updated: 16 Oct 2021 3:56 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையின் நடுவில் மின்கம்பம்

தூத்துக்குடி மாநகராட்சி 35-வது வார்டு 3-வது மைல் புதுக்குடி 2-வது தெரு சந்திப்பு பகுதியில் இரும்பாலான மின்கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக தெருவின் நடுவில் உள்ளது. அங்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை சாலையோரமாக இடமாற்றி அமைக்காததால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, விபத்துகளை ஏற்படுத்தும் மின்கம்பத்தை இடமாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
- மருதபெருமாள், தூத்துக்குடி.

பழுதடைந்த சாலை

நெல்லை மாவட்டம் ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருந்து தோப்புவிளை வழியாக உறுமன்குளம் செல்லும் சாலை பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலை முழுவதும் உருக்குலைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை உடனே புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- அ.பிச்சை, தோப்புவிளை.

தெருவிளக்குகள் ஒளிருமா?

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் கல்லூரணி பஞ்சாயத்து வ.உ.சி. காலனியில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. எனவே, பழுதடைந்த தெருவிளக்குகளை புதுப்பித்து மின்விளக்குகள் மீண்டும் ஒளிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- முத்துகிருஷ்ணன், கல்லூரணி.

சுகாதார சீர்கேடு

திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மறுகால் வாய்க்காலானது நகரின் நடுவில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, நகர பஞ்சாயத்து அலுவலகம் அருகில் வழியாக சென்று ஜீவாநகர் கடலில் கலக்கிறது. இந்த வாய்க்காலில் சிலர் குப்பைகளை கொட்டுவதாலும், கழிவுநீரை கலக்க விடுவதாலும், தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி விட்டது. இங்கு கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் அருகில் அரசு பெண்கள் பள்ளிக்கூடம் உள்ளது. எனவே, வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
- மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

சாலையில் குவிந்த குப்பைகள்

திருச்செந்தூர் வடக்கு ரத வீதி பட்டர்குளம் தெரு சந்திப்பு பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டுவதால், அங்கு சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு குப்பைத்தொட்டி வைத்து, குப்பைகளை தினமும் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- நாராயணன், திருச்செந்தூர்.

ஆபத்தான மின்கம்பம் 

தூத்துக்குடி மாவட்டம் மேலதிருச்செந்தூர் பஞ்சாயத்து நா.முத்தையாபுரம் எல்லப்பநாயக்கன்குளத்தின் கரையில் உள்ள நீரேற்று நிலையங்கள் மூலம் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக அந்த குளத்துக்குள் தென்கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட மின்கம்பத்தின் அடிப்பகுதி வலுவிழந்து சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, ஆபத்தான மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் அமைத்து நேராக மாற்றி வலுவாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- மு.தமிழ்பரிதி, திருச்செந்தூர்.

சேறும் சகதியுமான மார்க்கெட்

திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வளாகத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இங்கு மழைக்காலத்தில் குளம் போன்று தண்ணீர் தேங்குவதால் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, மார்க்கெட் வளாகத்தில் தண்ணீர் தேங்காத வகையில், சிமெண்டு தளகற்கள் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- கணேசன், திருச்செந்தூர்.

புதிய மின்கம்பங்கள் அமைக்கப்படுமா?

கோவில்பட்டி அருகே வடக்கு இலுப்பையூரணியில் இருந்து கணபதிபட்டி செல்லும் சாலையில் உள்ள 2 மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. மின்கம்பங்களின் கான்கிரீட் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளன. இதனால் பலத்த காற்றில் மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
- முத்துமுருகன், கோவில்பட்டி.


Next Story