தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜூனா கோவில் தெப்ப திருவிழா


தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜூனா கோவில் தெப்ப திருவிழா
x
தினத்தந்தி 16 Oct 2021 8:39 PM GMT (Updated: 16 Oct 2021 8:39 PM GMT)

தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜூனா கோவில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்கள்.

தாளவாடி
தாளவாடி அருகே ரங்கசாமி-மல்லிகார்ஜூனா கோவில் தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்கள். 
தெப்ப திருவிழா
தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தில் பிரசித்திபெற்ற ரங்கசாமி-மல்லிகார்ஜூனா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தெப்ப திருவிழா நடைபெறும். இந்த ஆண்டும் தெப்ப திருவிழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. பின்னர் மதியம் 12 மணி அளவில் சாமி வீதி உலா புறப்பட்டது.
ரங்கசாமி, மல்லிகார்ஜூனா சாமிகளின் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு திகனாரை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
மழைபெய்ய வேண்டுதல்
ஊர்வலம் முடிவில் தெப்ப திருவிழா நடைபெறும் குளத்தை அடைந்தது. கொட்டும் மழையில் குளத்தின் நடுபகுதிக்கு சப்பரத்தை பக்தர்கள் சுமந்து சென்றனர், அங்கு குளத்து தண்ணீரில் தேர்வடிவில் இருந்த தெப்பத்தில் சப்பரம் வைக்கப்பட்டு குளத்தை 3 முறை சுற்றி கொண்டுவரப்பட்டது. குளத்தின் கரையில் நின்றுகொண்டு பக்தர்கள் பார்த்து ரசித்தார்கள். 
அப்போது ஆண்டு முழுவதும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்டுதல் விடுத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தெப்ப திருவிழாவை காண வந்திருந்தார்கள். 

Next Story