குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா
குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை நகரில் குற்றங்களை தடுக்க அனைத்து பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குடியிருப்பு சங்கம் மூலம் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கலாம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி கூடல்புதூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியான தபால்தந்திநகர் விரிவாக பகுதியான விவேகானந்தா மற்றும் வ.உ.சி.நகர் பகுதியில் சங்கத்தின் சார்பில் கேமரா அமைப்பது குறித்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து அந்த சங்கம் சார்பில் அந்த பகுதி முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 24 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இதன் தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக சட்டம்- ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் தங்கத்துரை கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா செயல்பாட்டை தொடங்கி வைத்தார். விழாவில் உதவி போலீஸ் கமிஷனர் சூரக்குமரன், மாநகராட்சி உதவி கமிஷனர் தட்சணாமூர்த்தி, குடியிருப்பு சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் அந்த பகுதியில் தினமும் போலீசார் ரோந்து பணிக்கு சென்று அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்து இட்டு செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதியில் குற்றச்சம்பவங்களை பெருமளவில் தடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story