வாலிபரிடம் செல்போன் பறிப்பு


வாலிபரிடம் செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2021 9:46 PM IST (Updated: 17 Oct 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரிடம் செல்போன் பறித்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

புதூர், 
தூத்துக்குடி மாவட்டம் சின்னம்மரெட்டிபட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). இவர் மதுரை கோச்சடையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். விக்னேஷ் மாட்டுத் தாவணி பஸ் நிலையம் அருகே தனது உறவினரை வெளி யூருக்கு அனுப்பிவிட்டு எதிரே செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் செல்போனை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் புதூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்குப்பதிவு செய்து  கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story