புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Oct 2021 10:40 PM IST (Updated: 17 Oct 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

சாலையை சீரமைப்பார்களா? 
மதுரை காமராஜர் சாலை தெற்கு பகுதியிலிருந்து, வடக்கு பகுதி செல்வதற்கு சுடலைமுத்து பிள்ளை சந்து வழியாகத்தான் வைகை ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆனால் இப்பகுதி சாலையானது குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சிறு மழை பெய்தாலும் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும். 
சிவா, மதுரை. 
வீணாகும் குடிநீர் 
விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி ஊராட்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் வீணாகி சாலையில் ஆறு போல ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் குறைந்த அளவிேலயே கிடைக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், இனாம்ெரட்டியபட்டி.
குவிந்து கிடக்கும் குப்பைகள் 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தாலுகா பாம்பன் ஊராட்சிக்குட்பட்ட தரவைதோப்பு பகுதியில் மக்காத குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. இதனை அகற்ற வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனேவ, குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராமசாமி, பாம்பன். 
சுகாதார சீர்கேடு 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வாரசந்தை பின்புறம் குப்பைகள், இறைச்சி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. அதனை முறையாக அள்ளாததால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றம் காரணமாக மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவக்குமார், காரைக்குடி. 
குண்டும், குழியுமான சாலை 
 மதுரை திருமலை நாயக்கர் மகால் முதல் நெல்பேட்டை வரையிலான சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைப்பார்களா?
பாண்டி, மதுரை. 
நாய்கள் தொல்லை 
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் நாளுக்கு நாள் ெதருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. ஆதலால்  தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பெண்களும், சிறுவர்- சிறுமிகளும் தெருவில் செல்லவே அச்சம் அடைகின்றனர். தொல்லை தரும் நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஜோதிகவி, பரமக்குடி.  
நகர பஸ்கள் இயக்கப்படுமா? 
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் .முதல் விளாம்பட்டி வரை நகர பஸ்கள் இதுநாள் வரை இயக்கப்படவில்லை. நகர பஸ்கள் இல்லாததால் கிராமப்புற பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவ்வழித்தடத்தில் நகர பஸ்களை இயக்கினால் பொதுமக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
மயில்சாமி, புதுவிளாங்குடி. 
குப்பைகளை அகற்றுவார்களா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்து அந்த கழிவுகளை சாலையோரத்தில் ஆங்காங்கே ெகாட்டி செல்கின்றனர். அதனை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், காரைக்குடி. 
 கால்வாய் வேண்டும் 
மதுரை மாவட்டம் சிந்தாமணி 56-வது வார்டில் உள்ள பழனி ஆறுமுகா நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்்து வருகின்றனர். இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதன் காரணமாக கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இங்கு சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா? 
இளங்கோ, சிந்தாமணி. 
அடிப்படை வசதி தேவை 
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஏர்வாடி ஊராட்சி கோகுல்நகர் பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு என எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதன் காரணமாக  அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
முருகவேல், ஏர்வாடி.

Next Story