தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு கடை வீதிகளில் ஜவுளி வாங்க குவிந்த பொதுமக்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு கடை வீதிகளில் ஜவுளி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
ஈரோடு
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு கடை வீதிகளில் ஜவுளி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
தீபாவளி
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி பொதுமக்கள் பல்வேறு பொருட்கள் வாங்குவதற்காக முக்கிய கடை வீதிகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் தற்போது வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோவில் வீதி போன்ற பகுதிகளில் ஏராளமான ஜவுளி கடைகள் உள்ளன. மேலும் கனி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது.
மக்கள் கூட்டம்
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புறநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஈரோட்டிற்கு ஜவுளிகள் வாங்க வந்திருந்தனர். இதன் காரணமாக கடை வீதிகள் மற்றும் கனி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜவுளிகளை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கூட்டத்தை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளதால் மாநகர் பகுதியில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாநகரின் முக்கியமான கடைவீதிகளில் இப்போதே தீபாவளி களை கட்டி உள்ளது.
Related Tags :
Next Story