ஆசிரியர் காலிப்பணி இடங்களை நிரப்ப வலியுறுத்தல்


ஆசிரியர் காலிப்பணி இடங்களை நிரப்ப வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Oct 2021 4:43 PM IST (Updated: 18 Oct 2021 4:43 PM IST)
t-max-icont-min-icon

கள்ளர் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணி இடங்களை நிரப்ப மாநாட்டில் வலியுறுத்தப் பட்டது.

உசிலம்பட்டி, 
கள்ளர் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணி இடங்களை நிரப்ப மாநாட்டில் வலியுறுத்தப் பட்டது.
மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செல்லம்பட்டி ஒன்றிய 23-வது மாநாடு செல்லம்பட்டியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஜெ.காசி, சிவனம்மாள் ஆகியோர் தலைமையில் மாநாடு நடைபெற்றது. மாநாட்டு கொடியை ஒன்றியக் குழு உறுப்பினர் ரத்தினம் ஏற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப்பாண்டி வரவேற்றார்.
மாநாட்டினை தொடங்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லகண்ணு பேசினார். ஒன்றிய செயலாளர் வி.பி.முருகன் வேலை அறிக்கை சமர்பித்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் பேசினார்.
செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளராக வி.பி.முருகன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 9 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யபட்டனர். அத்துடன் மாவட்ட மாநாடு பிரதிநிதிகள் 24 பேர் தேர்வு செய்யப் பட்டனர். மாநாட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் உயர் நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், செல்லம்பட்டி பகுதியில் அதிக அளவு பூக்கள் உற்பத்தி செய்யப்படுவதால் இங்கு சென்ட் தொழிற்சாலை அமைக்கவேண்டும்.
கால்வாய்கள்
 செல்லம்பட்டி பகுதியில் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும். கண்மாய்களுக்கு வரும் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டை நிறைவு செய்து வைத்து கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசினார். முத்துகுமார் நன்றி கூறினார்.

Next Story