பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 2 பேர் கைது
அலங்காநல்லூர் அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே குமாரம் மந்தை பகுதியில் வாலிபர்கள் 2 பேர் நேற்று முன்தினம் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்கள். இது குறித்த வீடியோ காட்சி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது பற்றி தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் திருப்புவனம், செல்லப்பனேந்தல் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (21) என்பவர் தனது 18 வயதான நண்பருடன் சேர்ந்து அங்குள்ள மந்தை திடலில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பட்டா கத்தியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story