ரெயில்வே கேட் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
நாகமலைப்புதூரில் ரெயில்வே கேட் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
மதுரை,
மதுரையில் இருந்து போடி செல்லும் ரெயில்வே ரோட்டில் வடபழஞ்சி செல்லும் தார் சாலையில் நாகமலைபுதூரில் ரெயில்வே ரோடு கிராசிங் அமைந்துள்ளது. அதில் தரைவழியாக சுரங்கப்பாதை அமைக்கப்பதற்கு ரெயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதற்காக பள்ளம் ஒன்றும் தோண்டப்பட்டது. அதற்கிடையில் இந்த சுரங்கப்பாதை அங்கு அமைக்க வேண்டாம், அங்கு கேட் கீப்பருடன் கேட் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அங்கு சுரங்கபாதை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த பள்ளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கிடையில் ரெயில் நிர்வாகம் அங்கு தண்டவாளம் அமைக்கும் பணியினை தொடங்கி விட்டனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் சுரங்கபாதைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும். அங்கு கேட் கீப்பருடன் கூடிய கேட் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை கே.கே.நகரை சேர்ந்த ஷேக்முகமது என்பவர் கலெக்டர் கார் முன்பு போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், மதுரை காஜிமார் தெருவை சேர்ந்த இர்பான் என்பவர் வீடு கட்டி தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாக கூறி மனு கொடுத்தார்.
Related Tags :
Next Story