சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 18 Oct 2021 8:56 PM GMT (Updated: 18 Oct 2021 8:56 PM GMT)

சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை,

சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பால்சுனை கண்ட சிவபெருமான்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஐப்பசி மாதத்தின் முதல் பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது.விழாவையொட்டி சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்னர் மலர் அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கருவறையிலுள்ள சத்தியகிரீஸ்வரர்சன்னதி, சன்னதி தெருவில் சொர்க்கநாதர், திருப்பரங்குன்றம் பாண்டி நகரிலுள்ள கல்யாண விநாயகர் கோவிலில் காசிவிசுவநாதர், திருநகர் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் பிரதோஷ விழா நடந்தது.

பிரளயநாதர் கோவில்

புதூர் அருகே உள்ள சூர்யா நகர் மெயின் ரோட்டில் உள்ள முத்தப்ப நாராயணர் கோவிலில் ஈஸ்வரனுக்கு பிரதோஷ பூஜை நடந்தது. மதுரை மேலமாசி வீதி காமாட்சி அம்மன் கோவில், எல்லீஸ் நகர் கருமாரியம்மன் கோவில், பாலமேடு சிவன் கோவில், சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவில், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில், தென்கரை மூலநாத சுவாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

Next Story