திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.23¼ லட்சம் வருமானம்


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.23¼ லட்சம் வருமானம்
x
தினத்தந்தி 18 Oct 2021 9:14 PM GMT (Updated: 18 Oct 2021 9:14 PM GMT)

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு உண்டியல்கள் மூலம் ரூ.23¼ லட்சம் வருமானம் கிடைத்து உள்ளது. 430 கிராம் தங்கமும், 3 கிலோ வெள்ளியும் கிடைத்தன.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு உண்டியல்கள் மூலம் ரூ.23¼ லட்சம் வருமானம் கிடைத்து உள்ளது. 430 கிராம் தங்கமும், 3 கிலோ வெள்ளியும் கிடைத்தன.

உண்டியல்கள் திறப்பு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 35 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் பணம், காசு, மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். உண்டியல்கள் நிரம்பியதும் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுகின்றன.
அந்த வகையில் கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி, அழகர் கோவில் துணை கமிஷனர் அனிதா ஆகியோர்களின் மேற்பார்வையில் இந்த மாதத்திற்கான உண்டியல்கள் திறப்பு நிகழ்ச்சி நடந்தது

ரூ.23¼ லட்சம் வருமானம்

இதில் திருக்கோவில் பணியாளர்கள், ஸ்ரீஸ்கந்தகுரு வித்யாலயா வேதபாடசாலை மாணவர்கள் மற்றும், ஐயப்பா சேவா சங்க உறுப்பினர்கள் பலர் உண்டியலில் வந்த ரூபாய் மற்றும் காசுகளை பிரித்து எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர். இதில் ரொக்க பணமாக ரூ.23 லட்சத்து 38 ஆயிரத்து 636 இருந்தது.மேலும் 430 கிராம் தங்கமும், 3 கிலோ வெள்ளியும் கிடைத்தன.
.உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் தக்கார் பிரதிநிதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கண்காணிப்பாளர் லெட்சுமிமாலா, கோவில் உள்துறை சூப்பிரண்டு உன்னாலே பாலாஜி, அலுவலக சூப்பிரண்டு பாலலெட்சுமி, துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், பேஷ்கார் புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story