45 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
கொட்டாம்பட்டியில் 45 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டியில் 45 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு வீடுகள்
கொட்டாம்பட்டியில் யூனியன் அலுவலகம் செல்லும் சாலை அருகே உள்ள வலிக்கன்குளம் கண்மாய், பஸ் நிலையம் பின்புறம் உள்ள கோனார்குளம் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும் என சென்னை ஜகோர்ட்டில் தனிநபர் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இதனை தொடர்ந்து நீர்நிலைகள் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவை நிறைவேற்றவில்லை என அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
45 வீடுகள் இடித்து அகற்றம்
இதனை தொடர்ந்து மேலூர் தாசில்தார், வருவாய் துறையினர் கொட்டாம்பட்டி யூனியன் அதிகாரிகள் அளவீடு செய்து சம்பந்தப்பட்ட வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நேற்று தாசில்தார் இளமுருகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மணிமேகலை மற்றும் கிராம நிர்வாக அலுவலர், யூனியன் ஆணையாளர்கள் செல்லப்பாண்டி, பாலசந்தர், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
மதுரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், மணி தலைமையில் துணை சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் பத்மநாபன் உள்பட 150 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
வலிக்கன்குளம் கண்மாயில் 29 வீடுகள், ராமர் கோவில் மற்றும் 10 கழிப்பறைகளும், கோனார்குளம் கண்மாயில் 16 வீடுகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலையில் உள்ள கடைகளும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
Related Tags :
Next Story