ரோட்டில் நின்றிருந்தவர் கார் மோதி சாவு


ரோட்டில் நின்றிருந்தவர் கார் மோதி சாவு
x
தினத்தந்தி 20 Oct 2021 1:04 AM IST (Updated: 20 Oct 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி அருகே ரோட்டில் நின்றிருந்தவர் கார் மோதி பலியானார்.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவை சேர்ந்த ராமன் மகன் சுரேஷ் (வயது 38). இவர் அங்குள்ள ஒரு கிரஷரில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஒரு ஓட்டலில் இட்லி வாங்கிகொண்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார், சுரேஷ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். விபத்தில் பலியான சுரேஷ்க்கு அங்காள ஈஸ்வரி என்ற மனைவியும் கிருத்திக் ரோஷன், நித்திஸ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story