கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்தில் பாதிரியார் கைது
கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் மதமாற்ற தடை சட்டத்தில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
உப்பள்ளி:
உப்பள்ளி டவுன் பைரதேவரகொப்பா பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அதேப்பகுதியை சேர்ந்த பஜ்ரங்தள அமைப்பினர் தேவாலயத்திற்குள் புகுந்து பாதிரியார் சோமு அவராதி மற்றும் அங்குள்ளவர்களிடம் தகராறு செய்தனர்.
இதுபற்றி பாதிரியார், பஜ்ரங்தள அமைப்பினர் மீது நவநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஜ்ரங்தள அமைப்பினரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பாதிரியார் சோமு அவராதி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்வதாகவும், அதனால் தான் தேவாலயத்திற்கு புகுந்து கண்டித்ததாக தெரிவித்தனர். இதற்கிடையே மதமாற்ற முயற்சியில் ஈடுபடும் பாதிரியார் சோமு அவராதிைய கைது செய்யும்படி இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஆனாலும் போலீசார் பாதிரியாரை கைது செய்யவில்லை.
இதையடுத்து இந்து அமைப்பினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டம் நடத்தி பாதிரியாரை கைது செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைதொடர்ந்து எதிர்ப்பு வலுத்ததால் நேற்று தேவாலயத்திற்கு சென்று மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் பாதிரியார் சோமு அவராதியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Related Tags :
Next Story