நெல்லையில் கொரோனாவுக்கு முதியவர் பலி
நெல்லையில் கொரோனாவுக்கு முதியவர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கடந்த 8-ந் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர் 11-ந் தேதி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இவருடன் சேர்த்து மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 431-ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 199 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 321-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26 ஆயிரத்து 812 பேர் குணமடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story