காணாமல் போன 141 செல்போன்கள் மீட்பு


காணாமல் போன 141 செல்போன்கள் மீட்பு
x
காணாமல் போன 141 செல்போன்கள் மீட்பு
தினத்தந்தி 20 Oct 2021 3:44 PM GMT (Updated: 20 Oct 2021 3:44 PM GMT)

காணாமல் போன 141 செல்போன்கள் மீட்பு

கோவை

கோவை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் குறித்து பொதுமக்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து இருந்தனர். இதையடுத்து காணாமல் போன செல்போன்களை மீட்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர். 

இதில் 141 போன்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.


இதற்கு போலீஸ் சூப்பிரண்டு செல்வநாக ரத்தினம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சுஹாசினி, ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களிடம் செல்போன்களை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் குறித்து பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தால், அவர்களுக்கு சி.எஸ்.ஆர். வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 125 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

மேலும் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக 347 புகார்கள் வந்து உள்ளது.இதில் இதுவரை 141 செல்போன்கள் மீட்கப்பட்டு தற்போது ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதில் கோவில்பாளையத்தை சேர்ந்த கவிதா என்பவரது செல்போன் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காணமல் போனது. 2 ஆண்டுகளுக்கு பின் தற்போது இந்த செல்போன் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் தங்களது செல்போன் தொலைந்து போனால் அதுகுறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையம் அல்லது மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கலாம். பொதுமக்களின் கவனக்குறைவு காரணமாகவே செல்போன்கள் அதிகமாக தொலைந்து போவதாக தெரிகிறது.


செல்போன் கடை வைத்து உள்ளவர்கள், தங்களிடம் ஒரே நபர் தொடர்ந்து செல்போன்களை விற்பனை செய்ய வந்தால், அதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். செல்போன்கள் தொலைந்தால் ‘டிஜி-காப்' என்ற செயலி மூலமும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story