மதுரை கோட்ட ரெயில்வேக்கு விருது
மதுரை கோட்ட ரெயில்வே விருது வழங்கப்பட்டது.
மதுரை,
தென்னக ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்கள் உள்ளன. இதற்கிடையே ஒவ்வொரு வருடமும் ரெயில்வே வார விழா கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது ரெயில்வே கோட்டங்களில் சிறப்பாக செயலாற்றிய துறை மற்றும் கோட்டங்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கும் விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரெயில்வே வார விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் தென்னக ரெயில்வேயின் சிறந்த போக்குவரத்து மேலாண்மைக்கான விருதை மதுரை கோட்டத்தின் இயக்க பிரிவு பெற்றுள்ளது. அதன்படி, தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், மதுரை கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் ரதி பிரியாவுக்கு இந்த விருதை வழங்கினார். அதேபோல மருத்துவம், பண்டகசாலை பணியாளர் மேலாண்மை, பணியாளர்கள் பணி ஆய்வு மற்றும் ஆட்சிமொழி ஆகியவற்றுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இதில் சுகாதாரத்துறைக்கான விருதை மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் பாஸ்கர் பெற்றார். அத்துடன் கோட்ட பண்டக மேலாளர் கிரண்குமார், முதுநிலை ஊழியர் விவகார அலுவலர் சுதாகரன், ஆட்சிமொழி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் பெற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது தலைமை வர்த்தக மேலாளர் நீனு இட்டியேரா, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அனந்த பத்மநாபன் மற்றும் தென்னக ரெயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story