புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Oct 2021 1:06 AM IST (Updated: 23 Oct 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

குடிநீர் பிரச்சினை 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வழிமறிச்சான் கிராமத்தில் குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. இப்பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-சீதாராம், பரமக்குடி. 

எரியாத தெருவிளக்குகள் 

திருமங்கலம் அடுத்த பொன்னம்பட்டியில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இரவில் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். 
-கண்ணன், பொன்னம்பட்டி. 
தகவல் தெரிவிக்க ேவண்டும் 
சாத்தூைர அடுத்த படந்தாலில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு வினியோகம் செய்யப்படும் குடிநீரும் எந்த முன்அறிவிப்பும் இன்றி வருவதால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே, குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்கு முன்பாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-குமார், படந்தால். 

சுகாதார சீர்கேடு 

மதுரை அவனியாபுரம் மீனாட்சி நகர் 62-வது வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் மழை நீர் சாக்கடை நீருடன் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரண்யா தீபிகா, அவனியாபுரம். 

தேங்கி நிற்கும் மழைநீர்

ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிராமத்தில் உள்ள சாலையானது குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
-நஜிபுல்குதா, புதுவலசை. 

சாக்கடை கால்வாய் தேவை  

மதுரை புதுக்குளம் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதன் காரணமாக கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே வீடுகளின் முன்பும், சாலைகளிலும் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை தேவை.
-ஜெயச்சந்திரன், மதுரை. 

நாய்கள் தொல்லை 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜா, சிவகாசி. 

குண்டும், குழியுமான சாலை 

மதுரை மாநகராட்சி 35-வது வார்டு மதிச்சியம் முத்துதெரு பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி வாகனங்களும் பழுதாகி விடுகிறது. விபத்துகளும் நடக்கிறது. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அன்புமணி, மதுைர.  
தூர்வார வேண்டும் 
திருப்பரங்குன்றம் மேலரதவீதி 95-வது வார்டில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, உடனடியாக சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். 
-பொன்முத்து, மதுரை.

Next Story