மாவட்ட செய்திகள்

பணம் எடுத்து தருவதாக நடித்து மோசடி செய்த பெண் கைது + "||" + Arrested

பணம் எடுத்து தருவதாக நடித்து மோசடி செய்த பெண் கைது

பணம் எடுத்து தருவதாக நடித்து மோசடி செய்த பெண் கைது
உசிலம்பட்டி பகுதியில் ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுத்து தருவதாக நடித்து மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
உசிலம்பட்டி, 

உசிலம்பட்டியில் உள்ள மதுரை சாலை மற்றும் பேரையூர் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க வரும் நபர்களிடம் தான் பணம் எடுத்து தருவதாக கூறி இளம்பெண் ஒருவர் மோசடி செய்ததாக உசிலம்பட்டி போலீசாருக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி நகர் போலீசார் அந்தந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ராஜேஷ் கண்ணா மனைவி மணிமேகலை (வயது 23) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து உசிலம்பட்டி நகர் போலீசார் மணிமேகலை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 32 ஆயிரத்து  500 ரூபாயை கைப்பற்றினர். இவர் இதுபோன்ற மோசடியில் பல்வேறு இடங்களில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தவர் கைது
பணகுடி அருகே பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
2. கொள்ளையில் தொடர்புடைய போலீஸ் ஏட்டு கைது
அருப்புக்கோட்டையில் நடந்த துணிகர ெகாள்ளையில் கொள்ளையில் தொடர்புடைய போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.
3. மாணவிகளிடம் சீண்டலில் ஈடுபட்ட ஓவிய ஆசிரியர் கைது
சிவகாசி அருகே மாணவிகளிடம் சீண்டலில் ஈடுபட்ட ஓவிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
4. 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
5. நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.