காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவராக படப்பை மனோகரன் தேர்வு
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவராக படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஊராட்சி குழுத்தலைவர்
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களாக அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.-8, காங்கிரஸ்-1, ம.தி.மு.க.-1, விடுதலை சிறுத்தைகள கட்சியை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 11 பேரும் இந்த மாதம் 20-ந்தேதி உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்த படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவித்தார். கலெக்டரின் அறிவிப்பை தொடர்ந்து படப்பை மனோகரன் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிகாரிகள் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார்.
இதனை தொடர்ந்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட படப்பை மனோகரனுக்கு கட்சி தலைவர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் மலர் மாலைகள், சால்வைகள் அணிவித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
துணைத்தலைவர்
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவராக நித்தியா சுகுமார் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி சான்றிதழ் வழங்கினார்.
Related Tags :
Next Story