நாகர்கோவில்: 11 மணி நேரம் தாமதமாக வந்த மும்பை ரெயில் பயணிகள் அவதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Oct 2021 11:21 AM IST (Updated: 23 Oct 2021 11:21 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் ஒன்று மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு 11 மணி நேரம் தாமதமாக வந்துள்ளது.

நாகர்கோவில், 

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலானது எப்போதும் காலை 10 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைவது வழக்கம். 

ஆனால் நேற்று இந்த ரெயிலானது 11 மணி நேரம் தாமதமாக இரவு 9 மணிக்கு வந்து சேர்ந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வெளி மாநிலங்களில் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த ரெயிலானது தாமதமாக வந்து சேர்ந்ததாக  தெரிவித்தனர்.

ரெயில் 11 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்த காரணத்தினால், அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகளும், அவர்களை வரவேற்க ரெயில் நிலையத்துக்கு வந்த உறவினர்களும் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள்.

Next Story