மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு + "||" + Theft

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
மதுரையில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.
மதுரை

மதுரை பெருங்குடியை அடுத்த சோளங்குருணி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 46). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி, வெள்ளி பொருட்கள், மற்றும் ரூ.2 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பெருங்குடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு
மதுரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடு நடைபெற்றது.
2. வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை கொள்ளை
ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
3. நகைக்கடை அதிபர் கழுத்தில் கத்தியை வைத்து 103 பவுன் நகை கொள்ளை
நகைக்கடை அதிபர் கழுத்தில் கத்தியை வைத்து 103 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
4. 2 வயது குழந்தையிடம் நகை திருட்டு
2 வயது குழந்தையிடம் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. கோவிலில் பொருட்கள் திருட்டு
கோவிலில் பொருட்கள் திருட்டு போனது.