கோர்ட்டு பணியை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
தேனியில் கோர்ட்டு பணியை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:
தஞ்சாவூரை சேர்ந்த வக்கீல் தியாகு காமராஜின் அலுவலகத்துக்குள் போலீசார் அத்துமீறி நுழைந்த சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்ட போலீசாரை பணி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தியும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணியை புறக்கணித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு தேனி வக்கீல் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டு சம்பந்தப்பட்ட போலீசாரை பணி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story