அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
வாடிப்பட்டி
மதுரை வடக்கு கோட்டம் ஆனையூர் மின்பிரிவுக்கு உட்பட்ட கலைநகர் பீடரில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே வள்ளுவர் காலனி, கலைநகர், வி.ஓ.சி. நகர், குரு நகர், ஜே.என். நகர், ஜே.கே. நகர், காலாங்கரை, விஸ்வநாதபுரம், மூவேந்தர் நகர், சென்ட்ரல் பேங்க் காலனி, பூந்தமல்லி நகர், மகாத்மா காந்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
ேமலும் சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதனால் அலங்காநல்லூர், கோட்டைமேடு, கல்லணை, தேசிய சர்க்கரை ஆலை சாலை, 15பி மேட்டுப்பட்டி, குறவன் குளம், சிறுவலை, அம்பலத்தடி அழகாபுரி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிபட்டி, அய்யூர், முடுவார்பட்டி, ஆதனூர், அச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story