1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 27 Oct 2021 11:17 PM IST (Updated: 27 Oct 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரை சேர்ந்தவர் போஸ் (வயது 70). இவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மானாமதுரை வட்ட வழங்கல் அலுவலர் ரேவதிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறையினருடன் சென்று போஸ் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது வீட்டின் உள்புறம் மூடைகளில் மறைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரிசியை பதுக்கி வைத்திருந்த போஸ் மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடமும் புகார் அளித்தனர். அவர்கள் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story