விராலிமலை அருகே காலிமனை வாங்கியதில் மோசடி; 2 பேர் மீது வழக்கு


விராலிமலை அருகே  காலிமனை வாங்கியதில் மோசடி; 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Oct 2021 6:11 PM GMT (Updated: 27 Oct 2021 6:11 PM GMT)

விராலிமலை அருகே காலிமனை வாங்கியதில் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விராலிமலை:
2 பேர் மீது வழக்கு 
திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் அல்போன்ஸ். இவர். கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் விராலிமலை தாலுகா வேலூர் கிராமத்தில் உள்ள ஜெமி புரோமோட்டார்ஸ் கிரீன் லேண்ட் என்ற நிறுவனத்தில் 3 காலி மனைகளை வாங்கியுள்ளார். அப்போது மனைகளுக்கு இருபுறமும் 23 அடி பாதை இருப்பதாக தன்னிடம் கூறி, மனைகளை விற்றதாகவும், ஆனால் தற்போது வந்து பார்க்கும் போது அந்த பாதையையும் பிளாட் போட்டு விற்று விட்டதாக கூறி அல்போன்ஸ் நேற்று விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் ஜெமி ஹவுசிங் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் ஆறுமுகம் மகன் கார்த்திக் மற்றும் சென்னையை சேர்ந்த சிரில் ஜோசப் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story