கொரோனாவால் பெற்றோரை இழந்த 62 குழந்தைகளுக்கு நிதியுதவி
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக கொரோனா நோயினால் பெற்றோரை இழந்த 62 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.1.86 கோடி நிதிக்கான காசோலைகள், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 7 பழங்குடியினர்களுக்கு ரூ.1.75 இலட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் மின்சாரத்துறை சார்பில் 4 விவசாயிகளுக்கு ரூ.15.22 லட்சம் மதிப்பில் இலவச மின் இணைப்புக்கான அட்டைகள் என மொத்தம் ரூ.2.02 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலசரன், மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story