ஈரோடு மாநகர் பகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் கணக்கெடுப்பு


ஈரோடு மாநகர் பகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 29 Oct 2021 2:26 AM IST (Updated: 29 Oct 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகர் பகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் கணக்கெடுத்தனா்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 7-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகர் பகுதியில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் விவரங்களை, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவ -மாணவிகள் 200 பேர் வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள், முதல் தவணை தடுப்பூசி, 2-ம் தவணை தடுப்பூசி போட்டவர்கள் விவரம், கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி எத்தனை பேர் போட்டுள்ளனர் என்ற விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் விவரங்களை மாணவ -மாணவிகள் சேகரித்து அதை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளனர்.
இதை அடிப்படையாக கொண்டு தடுப்பூசி போடாதவர்கள் இருக்கும் இடத்திற்கு, நடமாடும் வாகனம் மூலம் நேரடியாக சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

Next Story