பெருந்துறையில் நள்ளிரவில் வீடு புகுந்து திருட முயற்சி: முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்; வைரலான கண்காணிப்பு கேமரா காட்சிகளால் பரபரப்பு

பெருந்துறையில் நள்ளிரவில் வீடு புகுந்து திருட முயற்சி: முகமூடி கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்; வைரலான கண்காணிப்பு கேமரா காட்சிகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 Oct 2021 2:08 AM IST (Updated: 31 Oct 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து முகமூடி கொள்ளையர்கள் திருட முயன்ற சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கொள்ளையர்கள் நடமாட்டம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் அந்த பகுதியில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பெருந்துறை

முகமூடி கொள்ளையர்கள்
பெருந்துறையில் உள்ள பவானி ரோட்டில் ஆசிரியர் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் முகமூடி அணிந்து தலை முழுவதும் முக்காடு அணிந்து கொண்ட கொள்ளையர்கள் 4 பேர் வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டபடி பூனைபோல் ெமதுவாக பதுங்கி பதுங்கி சென்றனர். 
பதுங்கி பதுங்கி...
அவ்வாறு அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு தெருவில் பதுங்கி பதுங்கி செல்லும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது. வைரலாகி வரும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர் கூறுகையில், ‘எந்த வீட்டில் திருடலாம் என கொள்ளையர்கள் நோட்டமிட்டபடி சென்று உள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று உள்ளனர். ஆனால் அந்த வீட்டில் ஆட்கள் இருந்ததால் தங்களுடைய திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். நல்லவேளையாக எந்தவித திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை,’ என்றார். 
பொதுமக்கள் அச்சம்
இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் கொள்ளையர்கள் 4 பேர் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சப்பட வைத்து உள்ளது.

Next Story