ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி; புதிதாக 76 பேருக்கு தொற்று


ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி; புதிதாக 76 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 31 Oct 2021 2:15 AM IST (Updated: 31 Oct 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானாா்கள். புதிதாக 76 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 640 பேருக்கு பரிசோதனை செய்ததில், 79 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரத்து 235 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 97 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 742 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
இதற்கிடையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 37 வயது ஆண் கடந்த 28-ந்தேதியும், 72 வயது முதியவர் நேற்று முன்தினமும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 684 ஆக உயர்ந்தது. தற்போது தொற்று உள்ள 809 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story