ஈரோட்டில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி; 150 பேர் பங்கேற்பு
ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 150 பேர் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 150 பேர் பங்கேற்றனர்.
சிலம்பம் போட்டி
ஈரோடு மாவட்ட அமெச்சூர் சிலம்பம் கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விளையாட்டு போட்டிகளை தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தர்மராஜ் தொடங்கி வைத்தார்.
11 வயதுக்கு உள்பட்டவர்கள், 14 வயதுக்கு உள்பட்டவர்கள், 18 வயதுக்கு உள்பட்டவர்கள் மற்றும் 35 வயதுக்கு உள்பட்டவர்கள் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் குத்து வரிசை, நெடு கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை வாள் வீச்சு, ஒற்றை சுருள் வாள் வீச்சு, வேல் கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, இரட்டை வாள் வீச்சு, இரட்டை சுருள் வாள் வீச்சு, கம்பு சண்டை உள்பட 13 போட்டிகள் நடத்தப்பட்டன.
பரிசளிப்பு விழா
இந்த போட்டிகளில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட சிலம்பம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து மாலையில் வெற்றிபெற்ற வீரர் -வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. விழாவில் டாக்டர் ரகுநாத், செல்வகுமார், கலைத்தாய் சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவனர் தங்கவேல், கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மேலும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர் -வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டன. அனைத்து போட்டிகளிலும் முதல் இடம் பிடித்த வீரர் -வீராங்கனைகள் மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story