ஜீப் கவிழ்ந்து இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம்


ஜீப் கவிழ்ந்து இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம்
x
தினத்தந்தி 1 Nov 2021 1:37 AM IST (Updated: 1 Nov 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே ஜீப் கவிழ்ந்து இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம் ஏற்பட்டது.

கொட்டாம்பட்டி, 

கோவை ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார். இவர் தனது ஜீப் டிரைவர் கோவிந்தராஜூடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தார். அங்கு பணி முடிந்ததை தொடர்ந்து அவர்கள் கோவைக்கு ேபாலீஸ் ஜீப்பில் திரும்பி ெகாண்டிருந்தனர். மதுரை கொட்டாம்பட்டி அருகே கோட்டைப்பட்டி விலக்கு நான்கு வழி சாலையில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி மோத வந்ததால் ஜீப்பை டிரைவர் கட்டுப்படுத்த முயன்ற போது நிலைத்தடுமாறி ரோட்டோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸ் ஜீப் டிரைவர் கோவிந்தராஜ் இருவரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story