புகார் பெட்டி
புகார் பெட்டி
புதர்களை அகற்றவேண்டும்
புஞ்சைபுளியம்பட்டி தங்கசாலையில் நகராட்சிக்கு சொந்தமான பொது கிணறு உள்ளது. இங்கு மின்மோட்டார் அமைக்கப்பட்டு ்அதன் மூலம் அந்த பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிணற்றை சுற்றி மரம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. கிணற்றின் உள்ளேயும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் தண்ணீர் மாசு அடைந்துள்ளது. உடனே புதர்களை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எ.துரைசாமி, புஞ்சைபுளியம்பட்டி
வீணாகும் குடிநீர்
கோபி அருகே உள்ள அரக்கன்கோட்டை ஊராட்சி அலுவலகம் முன்பு கடந்த 10 நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் உடைந்துவிட்டது. இதனால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. எனவே குழாய் உடைப்பை உடனே சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அரக்கன்கோட்டை
குவிந்து கிடக்கும் குப்பை
அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி காலனியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோட்டோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குப்பைகள் அள்ளப்படாததால் சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ரோட்டின் இரு பகுதியிலும் புற்கள் வளர்ந்து புதர் போல காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த வழியாக அச்சத்துடன் செல்கின்றனர். எனவே குப்பைகளை அள்ளி, புதரை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேரு, சென்னம்பட்டி காலனி
குதிரைகளால் இடையூறு
கோபிசெட்டிபாளையம் சின்ன மொடச்சூர் கவின் கார்டன் பகுதியில் குதிரைகள் ரோட்டில் சுற்றித் திரிகின்றன. மேலும் குதிரைகள் ஒன்றோடொன்று சண்டையிட்டபடி ரோட்டில் வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகின்றன. இதனால் அவர்கள் கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். இதன் காரணமாக ரோட்டில் செல்ல சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் குதிரைகள் ரோட்டில் சுற்றிதிரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கவின் கார்டன், சின்ன மொடச்சூர்.
சாக்கடை அடைப்பு
கோபிசெட்டிபாளையம் அய்யப்பா நகர் பூங்கா அருகே பசுமை நகரில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாக்கடையில் மழைநீர் தேங்கியுள்ளதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால் பல்வேறு நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விஷ சந்துகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. எனவே சாக்கடை அடைப்பை உடனே சரிசெய்ய கோபிசெட்டிபாளையம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி
ஆபத்தான மின்கம்பம்
பவானிசாகர் தொகுதி தேசிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்டது கருப்பகவுண்டன்புதூர். இங்குள்ள மின்கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கருப்பகவுண்டன்புதூர்.
பாராட்டு
புஞ்சைபுளியம்பட்டி சுப்பிரமணிய சாமி கோவில் முன்பு குப்பை கொட்டப்பட்டு பின்னர் அங்கிருந்து அள்ளிச்செல்லப்பட்டது. குப்பைகளை கோவில் முன்பு சேகரித்து கொட்டாமல் மாற்று இடத்தில் கொட்டி அள்ளுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் கோவில் முன்பு கொட்டப்பட்ட குப்பைகளை உடனே அள்ளி தூய்மைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி
Related Tags :
Next Story