தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி வாங்க ஈரோடு கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது


தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி வாங்க ஈரோடு கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 1 Nov 2021 2:44 AM IST (Updated: 1 Nov 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிகள் வாங்க ஈரோடு கடை வீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு
தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிகள் வாங்க ஈரோடு  கடை வீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளி, பட்டாசுகளின் விற்பனை கடந்த சில தினங்களாக மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஜவுளி கடைகள் அதிகம் உள்ள ஈரோடு ஆர்.கே.வி.ரோடு கடை வீதி, நேதாஜிரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர்செல்வம் பூங்கா, திருவேங்கடசாமிவீதி, மேட்டூர்ரோடு ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஜவுளிகள் மட்டும் அல்லாமல் புதிய பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கினார்கள். இதனால் ஷோரூம்களில் செல்போன், டி.வி., பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கூட்டம் நிரம்பி வழிந்தது. பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகமாக கூடியதால் ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் போலீசார் நின்றுகொண்டு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தினர். மேலும் போக்குவரத்து போலீசார் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை.  இதேபோல் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது போலீசார் ஏறி நின்று தொலைநோக்கி (பைனாகுலர்)  மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஈரோடு மாநகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Next Story