பா.ம.க. பிரமுகர் கொலையில் தலைமறைவாக உள்ள 6 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
தஞ்சையில் பா.ம.க. பிரமுகர் கொலையில் தலைமறைவாக உள்ள 6 பேர் தேடப்படும் குற்றவாளியாக பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிபதி அறிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). பா.ம.க. பிரமுகரான இவர், 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை தொடர்பாக 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமலிங்கம் கொலை பின்னணியில் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இந்த வழக்கு, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ரகுமான் சாதிக், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜீத், புர்ஹானுதீன், சாகுல் அமீது மற்றும் நபீல் ஹாசன் ஆகிய 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டாமல் தலைமறைவாக உள்ளனர்.
இதையடுத்து அவர்கள் 6 பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிபதி அறிவித்தார். தலைமறைவாக உள்ள 6 பேர் மீதும் நேற்று பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் புகார் அளித்தனர். இது குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் 6 பேரில் ரகுமான் சாதிக் மட்டும் கைது செய்யப்பட்டார். மற்ற 5 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story