காஞ்சீபுரத்தில் பட்டாசு வாங்க குவிந்த பொதுமக்கள்
காஞ்சீபுரத்தில் புதிய ரக பட்டாசுகள் வருகை தந்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை தற்போது விரும்பி வாங்கி செல்கின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில் தீபாவளிக்கு பெரும்பாலானோர் பட்டாசுகளை வெடிக்கவில்லை. அதனால் 2 ஆண்டுகளாக பட்டாசு கடைகளில் வியாபாரம் சரி வர நடைபெறவில்லை. இந்த ஆண்டு அரசு கொரோனா கட்டுபாடுகளில் இருந்து சில தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு பட்டாசு வியாபாரம் சூடுபிடித்துள்ளது. மக்கள் தற்போது அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி வருகின்றனர்.
மேலும் புதிய ரக பட்டாசுகள் வருகை தந்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை தற்போது விரும்பி வாங்கி செல்கின்றனர்.
Related Tags :
Next Story