ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்


ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 2 Nov 2021 9:15 PM GMT (Updated: 2 Nov 2021 9:15 PM GMT)

ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு
ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தது. அந்த ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை எடுத்து போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில். ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. கஞ்சாவை கடத்தியவர்கள் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கோவை மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனா்.

Next Story