ஈரோடு மாவட்டத்தில் பட்டுக்கூடு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்


ஈரோடு மாவட்டத்தில் பட்டுக்கூடு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
x
தினத்தந்தி 3 Nov 2021 2:45 AM IST (Updated: 3 Nov 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பட்டுக்கூடு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

கடத்தூர்
ஈரோடு மாவட்டத்தில் பட்டுக்கூடு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். 
நலத்திட்ட பணிகள்
கோபி, அந்தியூர் தொகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விழாவுக்கு தலைமை தாங்கினார். அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், ஆர்.டி.ஓ. பழனிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சு.முத்துசாமி விழாவில் கலந்துகொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், நகரச் செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர் முருகன், தி.மு.க. நிர்வாகி சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் நகர தி.மு.க. செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.5 கோடி மதிப்பில்...
விழாவை தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அதுபோல் ஈரோடு மாவட்டத்திலும் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோபி மற்றும் அந்தியூர் சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் இன்று (அதாவது நேற்று) ரூ.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 
பட்டுக்கூடு கொள்முதல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி அமைச்சர்களிடம் பேசி மக்களுக்கான நலத்திட்ட பணிகள் பற்றி கேட்டறிந்து செயல்படுத்தி வருகிறார். அதிகாரிகளும் ஊக்கமாக பணி செய்கிறார்கள் தேர்தல் அறிக்கையில் கூறியபடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் 2 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் மக்களுடைய திட்டப் பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். 
பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு அதன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் பட்டுக்கூடு கொள்முதல் நிலையம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் விரைவாக நடைபெற்று வருகிறது. எந்த பகுதிகளில் பணிகள் தாமதமாக உள்ளதோ அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story