தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார்- 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 15 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி மாவட்டம் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீர்செய்யும் வகையில் போக்குவரத்து போலீசார், போலீசார், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். போலீசாருடன் தீயணைப்பு மற்றும் மருத்துவ துறையும் இணைந்து செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வு
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குற்ற தடுப்பு நடவடிக்கைக்காக ஈரோடு மாநகரில் முக்கிய இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 15 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, கூட்டநெரிசலை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதேபோல் சத்தியமங்கலம், பெருந்துறை, கோபி, அந்தியூர், பவானி, கொடுமுடி உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அரசு அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மற்றவர்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட வேண்டும். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story