நம்பியூரில் ஆடு திருடிய வாலிபரை துரத்தி பிடித்த இறைச்சி கடைக்காரர்
நம்பியூரில் ஆடு திருடிய வாலிபரை இறைச்சி கடைக்காரர் துரத்தி பிடித்தார்.
நம்பியூர்
நம்பியூரில் ஆடு திருடிய வாலிபரை இறைச்சி கடைக்காரர் துரத்தி பிடித்தார்.
ஆடு மாயம்
நம்பியூர் அழகாபுரியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34) இவர் நம்பியூர்-புளியம்பட்டி ரோட்டில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவர் வெட்டுவதற்காக ஆடுகள் வாங்கி தன்னுடைய கடையின் பின் பகுதியில் கட்டி வைத்திருந்தார்.
சம்பவத்தன்று காலை ஆட்டை கடைக்கு கொண்டுவர சென்றார். அப்போது அதில் ஒரு ஆட்டை காணவில்லை. உடனே தன்னுடைய நண்பர் குணசேகர் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் பல இடங்களில் தேடிப்பார்த்தார்.
வாலிபர் கைது
அப்போது நம்பியூர் ஓம்சக்தி வீதியில் சிவப்பு நிற பனியன் அணிந்திருந்த வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை வைத்துக்கொண்டு சென்றார். அவரை பார்த்ததும் சந்தேகமடைந்த சக்திவேல் அவரை நெருங்கி பார்த்தார். அப்போது அது அவருடைய ஆடு என்பது தெரிந்தது. அவர்களை பார்த்ததும் வேகமாக தப்பிச்செல்ல முயன்ற அந்த வாலிபரை சக்திவேல் துரத்திப்பிடித்தார். பின்னர் நம்பியூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தியபோது, அவர் நம்பியூர் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகரைச்சேர்ந்த 19 வயது வாலிபர் என்பது தெரிந்தது. மேலும் அவர் சக்திவேலின் ஆட்டை திருடியதையும் ஒப்புக்கொண்டர். இதையடுத்து போலீசார் 19 வயது வாலிபரை கைது செய்தார்கள்.
Related Tags :
Next Story