சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,135-க்கு விற்பனை- தீபாவளி பண்டிகையால் விலை உயர்ந்தது
சத்தி மார்க்கெட்டில் தீபாவளியையொட்டி ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,135-க்கு விற்பனையானது.
சத்தியமங்கலம்
சத்தி மார்க்கெட்டில் தீபாவளியையொட்டி ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,135-க்கு விற்பனையானது.
மல்லிகைப்பூ
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 35 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,135-க்கும், முல்லை ரூ.1,280-க்கும், காக்கடா ரூ.1,575-க்கும், செண்டுமல்லி ரூ.41-க்கும், பட்டுப்பூ ரூ.85-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.1,600-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், அரளி ரூ.160-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.
விலை அதிகரிப்பு
மல்லிகை, முல்லை, காக்கடா, கனகாம்பரம், ஜாதிமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிக விலைக்கு ஏலம் போனது. இதுபற்றி சத்தி மலர்கள் விவசாய சங்கத்தின் தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, கடந்த 3 நாட்களாக சுற்றுவட்டார பகுதியில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பூக்களின் வரத்து குறைந்துவிட்டது. மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி தேவையும் அதிகரித்ததால் வியாபாரிகள் அதிக விலைக்கு ஏலம் கூறினார்கள். இதனால் பூக்கள் விலை அதிகரித்தது என்றார்கள்.
Related Tags :
Next Story