ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒரே நேரத்தில் எழுந்தருளிய தெய்வங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைெயாட்டி அனைத்து தெய்வங்களும் ஒரே நேரத்தில் சேர்ந்து எழுந்தருளி காட்சி அளித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைெயாட்டி அனைத்து தெய்வங்களும் ஒரே நேரத்தில் சேர்ந்து எழுந்தருளி காட்சி அளித்தனர்.
சிறப்பு பூஜை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருடத்திற்கு 3 முறை ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய தெய்வங்கள் ஒன்று சேர்ந்து காட்சி அளிப்பது வழக்கம். அதாவது கவுசிக ஏகாதசி, தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய தினங்களில் தெய்வங்கள் ஒன்று சேர்ந்து காட்சி அளிப்பது வழக்கம்.
அந்த வகையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் ஆண்டாள் ேகாவிலில் உள்ள தெய்வங்கள் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதற்காக மேளதாளங்கள் முழங்க பெரிய பெருமாள் சன்னதியிலிருந்து பெரிய பெருமாள், பூமாதேவி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் ஆண்டாள் கோவில் கொண்டு வரப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
சர்வ அலங்காரம்
பின்னர் சர்வ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார் ஆகியோர் காட்சி அளித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story