ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா; முதியவர் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
x
தினத்தந்தி 6 Nov 2021 2:37 AM IST (Updated: 6 Nov 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. முதியவர் பலியானாா்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரத்து 641 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 68 பேர் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 218 பேர் மீண்டுள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 375 பேருக்கு பரிசோதனை செய்ததில் 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 80 வயது முதியவர் கொரோனா தொற்று ஏற்பட்டு, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 689 ஆக உயர்ந்தது. தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 734 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story