சென்னையில் மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் - ரெயில்வே


சென்னையில் மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் - ரெயில்வே
x
தினத்தந்தி 8 Nov 2021 7:59 AM IST (Updated: 8 Nov 2021 7:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனம்ழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 

இதற்கிடையில், கனமழை காரணமாக சென்னையில் இன்று மின்சார ரெயில் இயங்குமா? என்று பயணிகளிடையே குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையிலும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் இன்று வழக்கம்போல் இயங்கும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது. 

Next Story