பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் விசாகன் அறிவித்து இருக்கிறார்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றும் காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது.
இந்த நிலையில் திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் விசாகன் அறிவித்து இருக்கிறார்.
Related Tags :
Next Story